
கடந்த 2018ஆம் ஆண்டு சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு சுமார் 6.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதார உதவி செய்ய ஒப்பு கொண்டது.
அதன்படி 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பண உதவி மற்றும் 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிபொருள் உதவியும் இந்த ஒப்பந்தத்தில் அடக்கம்.
மேலும் இந்த உதவிகள் ஒரு வருட காலத்தில் வழங்கப்படும் என கூறப்பட்டதை போல உதவிகள் பாகிஸ்தானை அடைந்தன.
அதன் பிறகு மூன்று வருட காலத்திற்குள் 3 பில்லியன் பணத்தையும் சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் திரும்ப செலுத்த வேண்டியது ஒப்பந்தம்.
கடனை அடைக்க இன்னும் 2 வருட கால அவகாசம் உள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா மிக கடுமையான அழுத்தம் கொடுக்க துவங்கியது,
இதனையடுத்து வழக்கம் போல சீனாவிடம் இருந்து 1 பில்லியன் டாலர்களை கடன்பெற்று சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது.