இந்திய எல்லைக்குள் நுழைந்து இராணுவ நிலைகளை தாக்க முயற்சிக்கும் லஷ்கர் குழு-உளவுத் தகவல்கள்

குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய காத்திருப்பார்கள்.இதற்காக காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு உளவு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நன்கு பயிற்சி பெற்ற 12 பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத குழு இரு குழுக்களாக பிரிந்து எல்லைக்குள் நுழைய முயற்சி செய்து வருவதாக உளவுத் தகவல்கள் பறந்துள்ளன.

இவர்களுக்கு உதவ பாக்கின் பேட் பயங்கரவாத படை இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

ராஜோரியின் பிம்பர் காலி செக்டாரில் ஆறு பயங்கரவாதிகளுடன் ஒரு உதவியாளும் ஊடுருவ தயாராக உள்ளதாக உளவுத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர பூஞ்ச் செக்டாரில் லஷ்கர் கமாண்டர் அப்துல் பாசல் தலைமையில் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர்.

தற்போது காஷ்மீரில் இருந்து இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது குறைக்கப்பட்டுள்ளது.தற்போது படைகள் எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாத ஏவு முகாம்களை கவனித்து வருகின்றன.