
பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தும் விதமாக அவர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் செய்துவருகிறது.
இதற்காக சீனாவிடம் இருந்து 80000 ரவுண்டுகள் ஸ்டீல் புல்லட்கள் முதற்கொண்டு பல தளவாடங்களை வாங்க உள்ளது.ஏற்கனவே சில வருடங்களாக பயங்கரவாதிகள் ஸ்டீல் புல்லட்டுகளை உபயோகித்து வருகின்றனர்.இவை குண்டுதுளைக்காத ஆடையை கூட துளைக்க வல்லது.
இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறது பாகிஸ்தான்.
இது தவிர கண்காணிப்பு அமைப்புகள்,குளிர்கால உடைகள் மற்றும் உயர்மலைப்பகுதி பொருள்கள் மற்றும் ஆர்டில்லி ,காம்பாட் ட்ரோன்கள் ஆகியவற்றையும் பெற உள்ளது.
பாக் இராணுவத்தின் பிரிகேடியர் முகமது ஷாபர் தலைமையிலான பத்து பேர் கொண்ட குழு ஒன்று இதற்காக சீனா செல்கிறது.