பாகிஸ்தானுக்கு எண்ணெய் சப்ளையை நிறுத்திய சவுதி அரேபியா; உறவுகளை சீராக்க சவுதி செல்லும் பாக் ராணுவ தளபதி !!

  • Tamil Defense
  • August 14, 2020
  • Comments Off on பாகிஸ்தானுக்கு எண்ணெய் சப்ளையை நிறுத்திய சவுதி அரேபியா; உறவுகளை சீராக்க சவுதி செல்லும் பாக் ராணுவ தளபதி !!

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நிலைபாட்டை கண்டிக்காவிட்டால் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவோம் எனவும்,

தனது கருத்தை ஒத்த வேறு நாடுகளையும் பிரித்து அணி சேர்த்து கொண்டு புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம் எனவும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது.

இதனையடுத்து சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கான எண்ணெய் சப்ளையை நிறுத்தியதோடு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த வற்புறுத்தி வருகிறது.

இதனையடுத்து சவுதி மற்றும் பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சவுதி அரேபியா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பாகிஸ்தான் ராணுவ தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் உறுதி செய்துள்ளார்.