காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசவேண்டும்; அரபு நாடுகளுக்கு பாக் மிரட்டல் !!

  • Tamil Defense
  • August 7, 2020
  • Comments Off on காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசவேண்டும்; அரபு நாடுகளுக்கு பாக் மிரட்டல் !!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அரபு நாடுகள் பேசவில்லை என்பதால் பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளது.

சமீபத்தில் இந்த நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய எதிர்ப்பு நிலையை எடுக்க வேண்டும் இல்லை எனில் அந்த கூட்டமைப்பில் இருந்து விலக போவதாக அறிவித்து உள்ளது.

அதாவது இரண்டாவது மிகப்பெரிய இஸ்லாமிய நாடும், ஒரே அணு ஆயுத திறன் கொண்ட இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை இழக்க வேண்டிய நிலை வரும எனவும்,

காஷ்மீர் விவகாரத்தில் தன்னுடன் ஒத்த கருத்துடைய மற்ற நாடுகளை கொண்டு புதிய கூட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பாகிஸ்தான் விரக்தியின் உச்சத்தில் உள்ளது தெளிவாகிறது.