லடாக் மற்றும் குஜராத்தை இணைத்து புதிய மேப்பை வெளியிட்ட பாகிஸ்தான்

  • Tamil Defense
  • August 5, 2020
  • Comments Off on லடாக் மற்றும் குஜராத்தை இணைத்து புதிய மேப்பை வெளியிட்ட பாகிஸ்தான்

நேபாளத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தான் இந்திய பகுதிகளை இணைத்து புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.காஷ்மீர் மற்றும் லடாக் தவிர்த்து குஜராத்தின் பகுதிகளை இணைத்து புதிய மேப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டுமே இணைத்து தனது பகுதியாக பாக் கூறி வந்தது.தற்போது மொத்த காஷ்மீரையும் தன்னுடையது என கூறி மேப் வெளியிட்டுள்ளது.

பாக்கின் வரலாற்றிலேயே இந்த தினத்தை ஒரு முக்கியமான தினம் என பாக் பிரதமர் கூறியுள்ளார்.குஜராத்தின் ஜீனாகத் பகுதியையும் தன்னுடையது என இணைத்து இந்த மேப்பை பாக் வெளியிட்டுள்ளது.

நேபாளமும் இதே பாணியில் கலபானி,லிபுலேக்,லிம்பியதுரா ஆகிய இந்திய பகுதிகளை இணைத்து மேப் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.