காஷ்மீரின் சோபியான் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.
உளவுத் தகவலின் அடிப்படையில் சோபியானின் சித்ரகம் கிராம பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியின் போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையின் மீது துப்பாக்கியால் சுட என்கௌன்டர் தொடங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையால் வீழ்த்தப்பட்டான்.
சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.