பின்வாங்குவது பற்றி பேசவே மறுக்கும் சீனா; போர்க்கால தயார்நிலையில் சீன படைகள் !!

  • Tamil Defense
  • August 3, 2020
  • Comments Off on பின்வாங்குவது பற்றி பேசவே மறுக்கும் சீனா; போர்க்கால தயார்நிலையில் சீன படைகள் !!

சீனா பேச்சுவார்த்தைகளின் போது பின்வாங்குவது பற்றியே பேச மறுத்து வருகிறது ஆனால் மறுபுறம் தனது போர்க்கால திறன்களை அதிகரித்து வருகிறது.

இந்திய எல்லையோரம் அருகே உள்ள சீன ராணுவ தளங்களில் H6 எனும் சீன குண்டுவீச்சு விமானங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமானங்களின் இறக்கைகளில் KD63 க்ருஸ் ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பு 125 மைல்கள் ஆகும்.

இவை அனைத்தும் இந்திய வீரர்களை தாக்கும் தொலைவில் உள்ளன ஆனால் இத்தகைய விமானங்களுக்கு சாதகமான சூழல் அப்பகுதியில் இல்லை.

காரணம் அதிக உயரம் காரணமாக குறைந்த அளவு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் தான் மேலேழும்ப முடியும்,

மேலும் சீன விமானப்படையில் குறைந்த அளவு டேங்கர் விமானங்களே பயன்பாட்டில் உள்ள காரணத்தால் அதுவும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.