இந்திய துருப்புகளை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை-சீனாவுக்கு இந்தியா பதிலடி

  • Tamil Defense
  • August 23, 2020
  • Comments Off on இந்திய துருப்புகளை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை-சீனாவுக்கு இந்தியா பதிலடி

தற்போது நடைபெற்று வரும் எல்லைப் பிரச்சனையில் இந்தியா தனது துருப்புகளை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என தனது நிலையை தெளிவுற விளக்கியுள்ளது.

சனி அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்தார்.இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட நான்கு தளபதிகளும் பங்கேற்றனர்.

எல்லைப் பிரச்சனை குறித்து அனைத்தும் ஆராய பட்டு எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லைப் பிரச்சனை தீர்க்க இந்தியா-சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு இரு நாட்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஒரு புறம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேசிக்கொண்டே சீனா எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.