பின்வாங்குதலை நிறுத்திய சீனா; தெஸ்பங் மற்றும் பங்கோங்கில் பதற்றம்

  • Tamil Defense
  • August 2, 2020
  • Comments Off on பின்வாங்குதலை நிறுத்திய சீனா; தெஸ்பங் மற்றும் பங்கோங்கில் பதற்றம்

தெஸ்பங் மற்றும் பங்கோங் பகுதியில் பின்வாங்குதலை சீனப்படைகள் நிறத்தியுள்ளன.மேலும் பின்வாங்குதல் குறித்த எந்த அறிகுறியும் இல்லாததாலும் மாறாக எல்லை முழுதும் அருணாச்சல பிரதேசம் வரை படைகளை அதிரித்து வருவதால் இராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜீலை 30 அன்று இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.இதற்கு முன் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தாலும் தற்போது அடுத்த வாரத்திற்கு தள்ளிபோட்டுள்ளது இந்தியா.

ஜீலை 14 அன்று நடைபெற்ற கமாண்டர்கள் சந்திப்பில் சீனா பின்வாங்குவது குறித்து உறுதி அளித்தது.மற்ற பகுதிகளில் படைக்குறைப்பு செய்தாலும் பங்கோங்கில் படைக்குறைப்பு செய்யாமல் அப்படியே இருந்தது.தற்போது அருணாச்சல் வரை படையை அதிகரித்துள்ளது.

மறுபுறம் இந்திய மேலதிக வீரர்களை அனுப்பி வரஉள்ள பனிக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளது.முன்னனி பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு சப்ளைகள் செய்வது மிகுந்த சவாலான பணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எண்ணிக்கை என்ற அளலில் சீனப்படைகளுக்கு சமமான அளவில் இந்தியாவும் படைகளை அதிகரித்துள்ளது.