42000கோடியில் புதிய ஸ்டீல்த் நீ்மூழ்கிகள்-திட்டம் தொடக்கம்
1 min read

42000கோடியில் புதிய ஸ்டீல்த் நீ்மூழ்கிகள்-திட்டம் தொடக்கம்

வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து சுமார் 42000கோடியில் கடற்படைக்காக ஆறு புதிய ஸ்டீல்த் புதிய தலைமுறை நீர்மூழ்கிகள் கட்டுவதற்கான டென்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பி-75ஐ எனப்படும் இந்த திட்டத்திற்கான டென்டர் நடைமுறை அடுத்த மாதத்தில் விடப்பட உள்ளது மசகான் டோக் லிமிடெட் மற்றும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு request for proposal வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் ரூபின் டிசைன் பீரோ,பிரான்சின் நேவல் க்ரூப்-டிசிஎன்எஸ் ,ஜெர்மனியின் தைசென்க்ருப் மரைன் சிஸ்டம் ,ஸ்பெயினின் நாவன்டியா மற்றும் தென் கொரியாவின் டேவூ ஆகியவை தற்போது போட்டியில் உள்ளன.

தற்போது கடற்படையில் வெறும் 2 ஸ்கார்பின் மற்றும் 13 பழைய நீர்மூழ்கிகள் உள்ளன.தவிர இரு அணுசக்தி நீர்மூழ்கிகளும் உள்ளன.