இந்திய கடலோர காவல்படைக்கு புதிய கப்பல் !!

  • Tamil Defense
  • August 13, 2020
  • Comments Off on இந்திய கடலோர காவல்படைக்கு புதிய கப்பல் !!

இந்திய கடலோர காவல்படைக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 5 கடலோர ரோந்து கலன்கள் கட்டி வழங்கும் ஒப்பந்தம் GSL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

ஏற்கனவே 3 கலன்களை கட்டி கடலோர காவல்படையிடம் GSL GOA SHIPYARD LIMITED கோவா கப்பல் கட்டுமான தள நிறுவனம் வழங்கியது.

இந்த நிலையில் இன்று 4ஆவது கலனை இந்திய கடலோர காவல்படையிடம் GSL நிறுவனம் ஒப்படைக்க உள்ளது.

இந்த கலனை தில்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு செயலர் முனைவர் அஜய்குமார் (இ.ஆ.ப) அவர்களின் மனைவி திருமதி. வீணா அஜய்குமார் செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.