1 min read
மலைப்பகுதியில் இரவில் பறக்கும் போர்பயிற்சியில் புதிய ரபேல் விமானங்கள்
ஹிமாச்சலின் மலைப்பகுதிகளில் இரவில் பறக்கும் பயிற்சியை புதிய ரபேல் விமானங்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மீட்டியர் மற்றும் ஸ்கல்ப் ஏவுகணைகளுடன் இந்த பயிற்சியை ரபேல் மேற்கொண்டு வருகின்றன.
முதல் தொகுதி ரபேல் விமானங்கள் கடந்த ஜீலை 29ல் அம்பாலா விமானப்படை தளம் வந்தடைந்தன.இந்தியா ஆர்டர் செய்திருந்த 36 விமானங்களில் முதல் தொகுதி ஐந்து விமானங்கள் இந்தியா வந்துள்ளன.
ரபேல் விமானத்தில் நவீன மீட்டியர் ,மைக்கா மற்றும் ஸ்கல்ப் ஏவுகணைகள் உள்ளன.இதன் மூலம் ரபேல் பல்வேறு விதமான ஆபரேசன்களில் ஈடுபட முடியும்.