இந்தியாவுக்கு எதிராக பேச தயக்கம் காட்டும் புதிய மலேசிய அரசு !!
மொஹம்மது மஹாதீர் தலைமையில் முன்பிருந்த மலேசிய அரசு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை விமர்சித்தது.
இதன் காரணமாக இந்திய மலேசிய உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது, துருக்கி மற்றும் சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பிரச்சினை எழுப்ப முயற்சி செய்தது, இதனையடுத்து இந்தியா பாமாயில் இறக்குமதியை நிறுத்தியது.
தற்போது முஹ்யாதீன் யாசின் தலைமையில் பொறுப்பேற்று உள்ள மலேசிய அரசு சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வற்புறுத்தலுக்கு பணியாமல் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
உதாரணமாக புதிய மலேசிய அரசு பொறுப்பேற்றதும் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு.சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமூதீன் ஹசேன் உடன் பேசினார்.
அதை போல மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுல் குமார் மலேசிய வெளியுறவு அமைச்சரை பல முறை சந்தித்து உள்ளார், மேலும் அவர் பதவி ஏற்றதும் முதலில் சந்தித்த வெளிநாட்டு தூதர் நமது மிருதுல் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா மற்றும் மலேசிய இடையிலான வர்த்தக உறவும் சீராக்கப்பட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.