அக்டோபரில் உதயமாகும் புதிய ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு கமாண்ட்

இந்திய விமானப்படை தலைமையில் புதிய வான் பாதுகாப்பு கட்டளையகம் பிரக்யராஜில் அக்டோபர் இரண்டாவது வாரம் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானப்படை அக்டோபர் 8வது தனது தொடக்க தினத்தை கொண்டாட உள்ளது.அன்று இந்த புதிய கட்டளையகம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய கட்டளையகத்தின் நோக்கம் முப்படைகளில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் வான் பகுதியை பாதுகாப்பானதாக மாற்றுவது தான்.

இராணுவம்,விமானப்படை மற்றும் கடற்படையின் கீழ் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய வான் பகுதி பாதுகாக்கப்படும்.