
நிறைய நிறுவனங்கள் காமிராவுடன் கூடிய ஆளில்லா விமானத்தை மேம்படுத்துகின்றன.கண்காணிப்புக்காக இந்த ரக ஆளில்லா விமானங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த நிறுவனம் தயாரித்துள்ள வெரோ என்ற ஆளில்லா விமானம் இரு 38மிமீ கிரேனேடு லாஞ்சர்களை கொண்டுள்ளது.தானியங்கியாக இதை இயக்க முடியும்.இந்த கிரேனேடுகளை வானில் வைத்து இயக்கி எதிரிகள் மீது வீச முடியும்.
இந்த விமானத்தில் இரு காமிராக்கள் உள்ளன.இதன் மூலம் இதை இயக்குபவரால் இலக்கை தேர்ந்தெடுத்து அடிக்க முடியும்.இந்த விமானத்தை அதிஉயர் பகுதிகளில் இயக்க முடியும்.
இதே வானூர்தியின் நவீன வகையில் 40மிமீ கிரேனேடுகளை இணைக்க முடியும்.இன்னொரு ரகத்தில் பல வகையான வெடிபொருள்களை இணைக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆயுதங்கள் தவிர குண்டுகள்,உணவுப்பொருள்கள் போன்றவற்றை முன்னனி வீரர்களுக்கு கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது.