சீன செயலிக்கு போட்டியாக ஜம்மு காஷ்மீர் மாணவருடைய தரவு பரிமாற்ற செயலி !!

  • Tamil Defense
  • August 3, 2020
  • Comments Off on சீன செயலிக்கு போட்டியாக ஜம்மு காஷ்மீர் மாணவருடைய தரவு பரிமாற்ற செயலி !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோவ்ரி மாவட்டம் சட்டெயார் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான மாணவர் அஷ்ஃபக் சவுத்ரி.

இவர் சீன தகவல் பரிமாற்ற செயலியான “ஷேர் இட்” போன்றவற்றிற்கு போட்டியாக “டோடோ ட்ராப்” எனும் செயலியை உருவாக்கி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில் ” சீன செயலிகளை அரசு தடை செய்த பின்னர் தான் இதனை உருவாக்க துவங்கினேன், இதனை உருவாக்க எனக்கு 4 வாரங்கள் தேவைபடட்டது, மேலும் பல சர்வதேச தரம் வாய்ந்த செயலிகளை இந்தியாவுக்காக உருவாக்க விரும்புகிறேன்” என்றார்.

வாழ்த்துக்கள் அஷ்ஃபக் சவுத்ரி, உங்களை போன்ற காஷ்மீரிகளின் முன்னேற்றம், நாட்டின் கீரிடத்தில் அமைதியை கொண்டு வரும்.

ஜெய்ஹிந்த் !!