
இந்திய விமானப்படையின் மிக மிக முக்கியமான கட்டளையகம் மேற்கு விமானப்படை கட்டளையகம், இதன் தலைமையகம் தில்லியில் உள்ளது.
சுமார் 16 விமானப்படை தளங்களுடன் இந்த கட்டளையகம் தான் இருப்பதிலேயே மிகப்பெரிய விமானப்படை கட்டளையகமாகும்.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளை பாதுகாப்பது இந்த கட்டளையகத்தின் பணியாகும்.
இந்த கட்டளையகத்தின் தளபதியாக ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் சுரேஷ் பதவி வகித்து வந்தார், இவர் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவர், இங்கிலாந்தின் க்ரேன்ஃபீல்டு பல்கலைகழகத்திலும் பயின்றுள்ளார்.
மேலும் இவர் இந்திய விமானப்படையின் தலை சிறந்த போர்விமானிகளை கொண்ட TACDE அமைப்பிலும் பணியாற்றி உள்ளார்.
இன்று சுமார் 40 வருட சேவைக்கு பின்னர் தனது ராணுவ பணியில் இருந்து ஒய்வு பெற்று சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறார்.
இதையடுத்து மேற்கு விமானப்படை கட்டளையகத்தின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம் !!