ஆஃப்கானிஸ்தான் ஐ.எஸ் பிரிவுக்கு புதிய தளபதியாக பாகிஸ்தானியர் நியமனம்
1 min read

ஆஃப்கானிஸ்தான் ஐ.எஸ் பிரிவுக்கு புதிய தளபதியாக பாகிஸ்தானியர் நியமனம்

ஆஃப்கானிஸ்தான் ஐ.எஸ் பிரிவுக்கு புதிய தளபதியாக பாகிஸ்தானியர் நியமனம்; ஐ.எஸ் இயக்கத்துடன் பாக்கிற்கு உள்ள தொடர்பு அம்பலம் !!

கடந்த ஏப்ரல் மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கான ஐ.எஸ் பிரிவான “இஸ்லாமிக் ஸ்டேட் கொராஸான் மாகாணம்” அமைப்பின் தலைவனாக இருந்த அஸ்ஸாம் ஃபருக்கி ஆஃப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளால்
கைது செய்யப்பட்டான்.

இதன் பின்னர் அந்த அமைப்பின் உளவு பிரிவுடைய தலைவனும் அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவனுமான அஸதுல்லாஹ் ஒரக்ஸாய் இந்த அமைப்பை நிர்வகித்து வந்தான்.

ஆனால் சில நாட்கள் முன்னர் ஆஃப்கானிஸ்தான் சிறப்பு படைகள் ஜலாலாபாத் நகருக்கு அருகே அவனது பதுங்கிமிடத்தை சுற்றி வளைத்து தாக்கியதில் அவன் கொல்லப்பட்டான்.

இதனையடுத்து அந்த அமைப்பின் புதிய தளபதியாக ஷஹாப் அல்மாஹஜீர் எனும் பாகிஸ்தானியன் நியமனம் செய்யப்பட்டு உள்ளான்.

இதுபற்றி பதிவிட்டுள்ள ஆஃப்கன் உள்துறை அமைச்சர் மசூத் அந்தராபி “ஷஹாப் ஒரு பாகிஸ்தானியன் மேலும் பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் ஹக்கானி குழுவை சேர்ந்தவன் எனவும்,

ஹக்கானி குழு மற்றும் தாலிபான்கள் இணைந்து ஆஃப்கானிஸ்தான் முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த தாக்குதல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகும் போது ஐ.எஸ். கொரஸான் அமைப்பின் மீது பழி போட்டு தப்பித்து கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு தாலிபான்கள், ஹக்கானி குழு, அல்காய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் உடனான தொடர்பு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.