
உயர் மலைப்பகுதிகளில் பணிபுரியும் இராணுவ வீரர்களுக்காக கவச வாகனங்கள் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக இராணுவம் உள்நாட்டு டாடா தயாரிப்பு வாகனம் மற்றும் அமெரிக்கத் தயாரிப்பு ஸ்ட்ரைக்கர் அல்லது ஹம்வி கவச வாகனங்களில ஏதேனும் ஒன்றை பெற பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லடாக் போன்ற உயர்மலைப்பகுதிகளில் வீரர்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கு கவச வாகனங்கள் தேவையாக உள்ளது.இதற்காக இந்த மூன்று வாகனங்களில் ஏதேனும் ஒன்று வாங்குவது பரிசீலிக்கப்பட்டு அதற்கான முடிவு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பரிசீலனையும் போது வெளிநாட்டு தயாரிப்பை விட உள்நாட்டு தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டாடா நிறுவன தயாரிப்பு இன்னும் சர்விஸில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மறுபுறம் அமெரிக்கத் தயாரிப்பு ஸ்ட்ரைக்கர் மற்றும் ஹம்வி ஏற்கனவே அமெரிக்க படைகளில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.