இந்தியாவை சீண்டும் நேபாளம்; சர்ச்சைக்குரிய பகுதியில் வானூர்தி தளம்

  • Tamil Defense
  • August 7, 2020
  • Comments Off on இந்தியாவை சீண்டும் நேபாளம்; சர்ச்சைக்குரிய பகுதியில் வானூர்தி தளம்

இந்திய நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலத்தின் மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் நேபாளம் வானூர்தி தளம் அமைத்து வருகிறது.

நார்சாகி கிராமத்தில் தான் இந்த வானூர்தி தளம் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த இடத்தில் இருந்து மிகக் குறைந்த தூரத்தில் தான் சஷாத்திர சீம பால் படையின் தாரி எல்லை வெளிநிலை அமைந்துள்ளது.

சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டுமானம் தொடங்கி சில நாட்கள் தான் ஆகிறது என 21வது பட்டாலியன் எஸ்எஸ்பி படையின் கமாண்டன்ட் ராஜேந்திர பரத்வாஜ் கூறியுள்ளார்.

இந்த கட்டுமானம் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்படுகிறது.இது குறித்த ஆதாரங்களை புகைப்படங்களுடன் தலைமையகத்திற்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா நேபாள உறவு சரிந்து வருவதை அடுத்த இந்த கட்டுமானத்தை நேபாளம் துவங்கியுள்ளது.