இந்திய இராணுவத்தின் தாக்கும் சக்தியை அதிகரிக்க உள்ள நமிகா

  • Tamil Defense
  • August 18, 2020
  • Comments Off on இந்திய இராணுவத்தின் தாக்கும் சக்தியை அதிகரிக்க உள்ள நமிகா

பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் நாக் ஏவுகணை சுமந்து செல்லும் நமிகா கவச வாகனத்தை கடந்த ஆகஸ்டு 14 அன்று அறிமுகப்படுத்தினார்.

இந்த நமிகா கேரியரை டிஆர்டிஓ-உடன் இணைந்து இந்திய ஆர்டினன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.இந்த மொத்த திட்டமும் 3000 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

7.5கிமீ தொலைவில் உள்ள இலக்கின் மீது ஏவுகணைகளை ஏவ வல்லது நமிகா.இதை இயக்க நான்கு வீரர்கள் தேவைப்படுவர்.பகலை போல இரவிலும் செயல்பட வல்லது நமிகா.நீரிலும் நிலத்திலும் கூட இந்த வாகனம் செல்லக்கூடியது.

இதை நான்கு வீரர்கள் இயக்குவர்.குழுவின் கமாண்டருக்கு தனியான பனோரோமிக் பார்க்கும் கருவி உள்ளது.இதன் மூலம் அவர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்.

Land Navigation System (LNS) இந்த கேரியரில் இணைக்கப்பட்டுள்ளது.