இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி என்றால் இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக ஒருங்கிணைந்த படைத் தளபதி ராவத் அவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளார்.
எல்லைப்பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ள சீனாவை அமைதியான முறையில் பேசி வெளியேற்ற இந்தியா தற்போது முயற்சி செய்து வருகிறது.அப்படி நடக்கவில்லை என்றால் இராணுவ முறையில் ஆக்சன் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தற்போது தான் எல்லைப் பிரச்சனை தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர்,தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் நான்கு தளபதிகளும் சந்தித்து பேசி உள்ளனர்.