
சீனப்பிரச்சனை எல்லையில் தொடர்ந்து வரும் நிலையில் மைக்கா ஏவுகணையை சுகாய் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.
விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு முறை ஏவி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேற்கு வங்கத்தின் கலைகுண்டா விமான தளத்தில் இருந்து கிளம்பிய விமானம் இலக்கை வெற்றிகரமாக தாக்கியுள்ளது.
பிரான்சிடம் இருந்து பெற்ற இந்த மைக்கா ஏவுகணை அனைத்து காலநிலையிலும் செயல்பட வல்லது.குறைதூர மற்றும் நடுத்தூர இலக்குகளை தாக்கியழிக்க கூடியது இந்த ஏவுகணைகள்.
500மீ முதல் 60கிமீ வரை வரும் இலக்குகளை இந்த ஏவுகணை வீழ்த்த வல்லது.கடந்த வாரம் இரஷ்யாவிடம் இருந்து பெற்ற R-77 ஏவுகணையை இரு முறை ஏவி சோதனை செய்தது இந்தியா.இது 80-100கிமீ வரை வரும் இலக்குகளை வீழ்த்த வல்லது.