பாரமுல்லாவில் நடைபெற்ற என்கௌன்டரில் முக்கிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியான சஜ்ஜாத் என்பவனை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
திங்கள் அன்று காலை ரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் உட்சபட்ச உயிர்தியாகம் செய்தனர்.இந்த தாக்குதலுக்கு பழிதீர்க்க வீரர்கள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் முக்கிய பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.அவனிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன.