ஆஃப்கானிஸ்தான் சிறைச்சாலை மீது ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல் கேரள மருத்துவருக்கு தொடர்பு !!
1 min read

ஆஃப்கானிஸ்தான் சிறைச்சாலை மீது ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல் கேரள மருத்துவருக்கு தொடர்பு !!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாண தலைநகர் ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலை மீது தாக்குதல் நடைபெற்றது.

ஐ.எஸ் இயக்கம் நடத்திய இந்த மோசமான தாக்குதலில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த தாக்குதலில் நமது நாட்டின் கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக ஆஃப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.

கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டம் பத்னே பகுதியை சேர்ந்தவன் கலுக்கெட்டிய புரையில் இஜாஸ், மருத்துவரான இவனுக்கு ருஹெலா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

இவன் கடந்த 2016ஆம் ஆண்டு தனது மனைவி குழந்தை மற்றும் வேறு 14 பேருடன் ஹைதராபாத்தில் இருந்து மஸ்கட் வழியாக ஆஃப்கானிஸ்தான் சென்றுள்ளான்.

இவனது அண்ணணும் ஒரு ஐ.எஸ் பயங்கரவாதி ஆவான், கடந்த 2018ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற சண்டையில் அவனும் கொல்லப்பட்டு உள்ளான், ஆக இவனது குடும்பத்திற்கு வலுவான பயங்கரவாத பின்னனி உள்ளது தெளிவாகிறது.

இஜாஸின் மனைவி ருஹெலா மற்றும் குழந்தை ஆகியோர் தற்போது காபூல் சிறையில் மூன்று கேரள பெண்களுடன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர், இந்த மூன்று பெண்களும் கேரள ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை போலவே கடந்த மார்ச் மாதம் காபூலில் சீக்கிய குருத்வாரா மீது கொடுர தாக்குதல் நடைபெற்றது அதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலிலும் காஸர்கோடு மாவட்டம் த்ரிகாரிபூரம் பகுதியை சேர்ந்த முஹம்மது மூஹ்சின் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

ஆக கேரள மாநிலம் குறிப்பாக காஸர்கோடு மாவட்டம் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக உருமாறி உள்ளது என்பது தெளிவாகிறது மத்திய மாநில அரசுகள் விரைந்து செயலப்ட்டு பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குதல் மிக மிக நல்லது.