
காஷ்மீரை மறு ஒழுங்கு செய்வது சட்டவிரோதம் தவறானது என்ற சீனாவின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துள்ள இந்தியா; சீனாவிற்கு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை என பதிலடி கொடுத்துள்ளது.
அடுத்த நாடுகளின் விசயங்களில் சீனா மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் அனுராக் அவர்கள் கூறியுள்ளார்.
காஷ்மீரை பிரித்து ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த கருத்தை சீனா வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இந்திய சீனா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கருத்தால் மேலும் மோசமடையவே வாய்ப்புள்ளது.