லிபுலேக் வழியாக கைலாஷ் செல்லும் சாலை கிட்டத்தட்ட தயார்-அமைச்சர் நிதின் கட்காரி

  • Tamil Defense
  • August 6, 2020
  • Comments Off on லிபுலேக் வழியாக கைலாஷ் செல்லும் சாலை கிட்டத்தட்ட தயார்-அமைச்சர் நிதின் கட்காரி

பிதோராகர் வழியாக கைலாஷ் செல்லும் பெரிய அளவிலான சாலைப் பணிகள் கிட்டத்தட்ட 85 சதவீதம் முடிந்துவிட்டதாக யூனியன் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கூறியுள்ளார்.

சுமார் 12000கோடிகள் அளவிற்கு சர்தாம் புரோஜெக்ட் முடியும் தருவாயில் உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த லிபுலேக் பகுதியை தான் நேபாளம் தன்னுடையது என இணைத்து புதிய மேப் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கட்டப்பட்டுள்ள 80கிமீ நீளமுள்ள சாலை 17000மீ உயரத்தில் உள்ள லிபுலேக் கணவாய் பகுதிகளை உத்ரகண்டின் தார்சுலா பகுதியோடு இணைக்கிறது.