
ஜப்பானிய ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரிகளை முன்கூட்டியே தாக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தம் செய்ய யோசனை தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய அரசியலமைப்பு சட்டத்தின் 9ஆவது பிரிவின் படி ஜப்பானிய ராணுவம் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட அனுமதி அளிக்கிறது அதாவது தனது நாட்டின் எல்லைக்குள் தான் செயல்பட முடியும் என்கிறது.
இந்த நிலையில் வட கொரியா மற்றும் குறிப்பாக சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து ஜப்பானுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
ஒரு வேளை இந்த நாடுகள் ஜப்பான் மீது ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தினால் ஜப்பானால் அந்த நாடுகளுக்கு பதிலடி கொடுக்க முடியாது.
ஆகவே இத்தகைய தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு முன்கூட்டியே ஏவுதளங்களை தாக்கி அழிக்க ஜப்பானிய படைகளை அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய தற்போது யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் 9ஆவது பிரிவை நீக்க முனைவது குறிப்பிடத்தக்கது.