இந்திய கொடி ஏந்தி 16000 அடி உயரத்தில் பங்கோங் ஏரியில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படையினர் சுதந்திர தினம் கொண்டாடினர்.
இந்த வருடம் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான மோதலில் சிறப்பு செயல்பட்டமைக்காக 294 வீரர்கள் கமென்டேசன் விருது பெற்றனர்.இராணுவ வீரர்களுடன் தோளோடு தோள் நின்று போராடியமைக்காக 21 வீரர்கள் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
நக்சல்களை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டமைக்காக ஆறு வீரர்களுக்கு கமென்டேசன் விருது பரிந்துரைக்கப்பட்டது.