ஆஃப்கானிஸ்தானில் முக்கிய ஐ.எஸ் உளவுப்பிரிவு தலைவனும், முக்கிய தளபதியும் சுட்டு வீழ்த்தப்பட்டான் !!

  • Tamil Defense
  • August 2, 2020
  • Comments Off on ஆஃப்கானிஸ்தானில் முக்கிய ஐ.எஸ் உளவுப்பிரிவு தலைவனும், முக்கிய தளபதியும் சுட்டு வீழ்த்தப்பட்டான் !!

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படையினர் முக்கிய ஐ.எஸ் தளபதியும் அந்த இயக்கத்தின் உளவுப்பிரிவு தலைவனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தின் புறநகர் பகுதியில் அஸதுல்லாஹ் ஒராக்ஸாய் பதுங்கி இருப்பதாக தகவல் கிட்டியதை அடுத்து,

ஆஃப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு முகமையின் சிறப்பு படையினர் விரைந்து சென்று சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் அஸதுல்லாஹ் ஒராக்ஸாய் வீழ்த்தப்பட்டான், இது ஆஃப்கானிஸ்தான் படைகளுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், ஐ.எஸ் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

ஐ.எஸ் இயக்கத்தின் ஆஃப்கானிஸ்தான் பிரிவு தலைவன் அஸ்ஸாம் ஃபருக்கி மற்றும் இதர 19 பயங்கரவாதிகளை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.