சோதனைகளை சந்திக்க உள்ள இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல்

  • Tamil Defense
  • August 20, 2020
  • Comments Off on சோதனைகளை சந்திக்க உள்ள இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல்

துறைமுக சோதனைகளை விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் வெற்றிகரமாக முடித்துள்ளது.பேசின் சோதனைகள் வரும் செப்டம்பரில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பேசின் சோதனைகளுக்கு பிறகு கடற்சோதனைகள் தொடங்கும்.அனைத்தும் முடிந்து விக்ராந்த் 2023 வாக்கில் படையில் இணைய உள்ளது.

262மீ நீளமுள்ள விக்ராந்த் கட்டுமானம் 2009ல் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது.இதில் 26 விமானங்களும் 10 வானூர்திகளும் இயக்க முடியும்.மிக்-29கே விமானங்கள் தான் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பேசின் சோதனைகளை கொரானா காரணமாக தாமதமாகி வருகின்றது.பேசின் சோதனையின் போது கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து அமைப்புகளும் சரியாக உள்ளனவா என சோதனை செய்யப்பட்டு அதன் பிறகு கடற்சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது இந்தியா ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டுமே இயக்கி வருகிறது.விக்ராந்த் படையில் இணைக்கப்பட்டால் அது கிழக்கு கட்டளையகத்தின் கீழ் இணைந்து செயல்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.