டிசம்பரில் படையில் இணையும் ஐஎன்எஸ் அரிகத் அணுசக்தி நீர்மூழ்கி

  • Tamil Defense
  • August 22, 2020
  • Comments Off on டிசம்பரில் படையில் இணையும் ஐஎன்எஸ் அரிகத் அணுசக்தி நீர்மூழ்கி

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கியாக அரிகத் இந்த வருட இறுதியில் படையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த 2017ல் அரிகத் கடற்சோதனைகளை தொடங்கியது.இந்த மொத்த கட்டுமானமும் தற்போது இரகசியமாக நடப்பதால் சோதனைகளோ அல்லது படையில் இணைத்தலோ பெரிய அளவில் விழாவாக நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே இரகசியமாக நடத்தி முடிக்கப்படுகிறது.

அரிகத் நீர்மூழ்கியின் அளவோ எடையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.ஆனால் ஏற்கனவே படையில் இணைக்கப்பட்ட அரிகந்தை விட அரிகத் பெரிய கப்பலாக இருக்கும் என்ற தகவல் மட்டுமே உள்ளது.

இது தவிர இந்தியா தாக்கும் நீர்மூழ்கிக்கான வடிவமைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளது.அரிகந்த் போலவே 6000 டன்கள் எடையுடன் இந்த நீர்மூழ்கிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.இதில் அதிக சக்தியுடைய Nuclear pressurized water reactor (PWR) பொருத்தப்பட உள்ளது.