
இந்தோனேசிய கடற்படையை வலுப்படுத்துவதன் மூலமாக சீன கடற்படையின் அடாவடிதனத்தை எதிர்கொள்ள இந்தோனேசிய அரசு விரும்புகிறது.
இதற்காக புதிய கப்பல்களை தனது கடற்படைக்கு வாங்க அந்நாட்டு அரசு விரும்புகிறது, அந்த வகையில் ஜெர்மனி நாட்டின் ப்ரெமென் ரக ஃப்ரிகேட் கப்பல்களை வாங்க விரும்புகிறது.
இந்த கப்பலை ஜெர்மனி கடற்படை 2021ஆம் ஆண்டு படையில் இருந்து விடுவிக்க உள்ள நிலையில் இந்தோனேசிய கடற்படை இதனை வாங்கி பயன்படுத்தி கொள்ள விரும்புகிறது.
ஏற்கனவே டென்மார்க் நாட்டின் ஐவர் ஹூயிட்ஃபீல்டு ரக கப்பல்களை வாங்கவும் இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.