காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்த துருக்கி-இந்தியா கடும் கண்டனம்

  • Tamil Defense
  • August 7, 2020
  • Comments Off on காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்த துருக்கி-இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து கருத்து தெரிவித்த துருக்கிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு ஓராண்டு கழித்து இந்த செயலை துருக்கி செய்துள்ளது.

இந்த கருத்துக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா “துருக்கியின் கருத்தை கவனித்ததாகவும் இது தவறான மற்றும் தேவையற்ற கருத்து” என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவினுடைய உள்நாட்டு விசயங்களில் துருக்கி கருத்து தெரிவிப்பதற்கு முன் இங்குள்ள நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஆர்டிக்கிள் 370 நீக்கம் அமைதி மற்றும் அந்த பகுதியின் ஸ்திரதன்மைக்கு எதிராக உள்ளது என துருக்கி கருத்து தெரிவித்திருந்தது.