இந்திய நிறுவனம் தயாரித்த துப்பாக்கி; ஏகேவிற்கு இணையானதா ?

  • Tamil Defense
  • August 18, 2020
  • Comments Off on இந்திய நிறுவனம் தயாரித்த துப்பாக்கி; ஏகேவிற்கு இணையானதா ?

இந்திய தனியார் நிறுவனம் ஒன்று புதிய ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.ஏகே-47 ரக துப்பாக்கிகளை விட இந்த புதிய துப்பாக்கிகள் சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஏகே ரக துப்பாக்கிகளை இந்திய இராணுவம் அதிக அளவில் உபயோகித்து வருகிறது.இந்திய விரைவில் இந்தியாவில் ஏகே தயாரிப்பு தொழில்சாலை ஒன்று ஏற்படுத்தி கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏகே-203 துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது.

பெங்களூருவில் இயங்கும் SSS Defence என்ற நிறுவனம் 7.62×39 ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது ‘7.62×39 SSS Defence Weapon’ என அழைக்கப்படும் ரைபிளை மேம்படுத்தியுள்ளது.இந்நிறுவனம் ஏற்கனவே மேம்படுத்தியுள்ள P-72 Rapid Engagement Combat Rifle (RECR) என்பதனை மாற்றி உருவாக்கியுள்ளது.

இது குறித்து பேசிய SSS Defence சிஇஓ விவேக் கிருஷ்னன் அவர்கள் ” ஒரு நவீன இராணுவத்திற்கு ஏகே-203 ஏற்புடையதாக இருக்காது எனவும் சாதாரண இன்பான்ட்ரி வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஆனால் சிறப்பு படைகள் ஏகே-203ஐ அதிக அளவு உபயோகிக்குமா என்பது சந்தேகமே என கூறியுள்ளார்.இதற்காக நாங்கள் AK வகை ஒன்றை உருவாக்கியுள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

7.62×39 ரக ரைபிள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா தடை பிறப்பித்துள்ளதால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கூறியுள்ளார்.ஏகே-203ல் இல்லாத அம்சங்கள் எங்களது துப்பாக்கியில் உள்ளது என கூறியுள்ளார்.இந்த துப்பாக்கியில் அனைத்துவித பார்க்கும் கருவிகளை பொறுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே படையில் உள்ள துப்பாக்கிகளை அப்கிரேடு செய்துள்ளதாகவும்இதன் இறுதி முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.