இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்க டிசம்பர் இந்தியா வரும் அதிநவீன MH60 Romeo ஹெலிகாப்டர்கள் !!

  • Tamil Defense
  • August 2, 2020
  • Comments Off on இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்க டிசம்பர் இந்தியா வரும் அதிநவீன MH60 Romeo ஹெலிகாப்டர்கள் !!

இந்திய கடற்படைக்கு கடந்த பல ஆண்டுகளாக அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க முயற்சி செய்யப்பட்டு வந்தது.

ஒரு வழியாக இந்திய கடற்படைக்கு அமெரிக்காவின் எம்.ஹெச் 60 ரோமியோ ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போரியல் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஹெலிகாப்டர்கள் பல்திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது, வருகிற டிசம்பர் மாதம் முதல் தொகுதியில் 5 அல்லது 6 ஹெலிகாப்டர்கள் இந்தியா வரவுள்ளன.

அமெரிக்கா அமெரிக்க கடற்படைக்கு வாங்கவிருந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவின் அவசர தேவையை கருதி நமக்கு வழங்க உள்ளது.

சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்கப்படும் இத்தகைய 24 ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையின் பழைய சீ கிங் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாகும்.

இந்த ஹெலிகாப்டர்களில் பல வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட உள்ளன, அவற்றை காணலாம்;

1) AGM-114 HELLFIRE missiles
2) APKWS Rockets
3) MK54 Torpedoes
4) M240D Crew Served Guns
5) GAU-21 Crew Served Guns
6) எதிர்காலத்தில் Naval Strike Missiles.