உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 150 புதிய பிரங்கிகள் வாங்க அனுமதி !!
1 min read

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 150 புதிய பிரங்கிகள் வாங்க அனுமதி !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) பல்வேறு ஆயுத தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.

அந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட ATAGS பிரங்கி ராணுவத்தின் தரம் மற்றும் கள சோதனைகளில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து சுமார் 150 ATAGS பிரங்கிகளை இந்திய தரைப்படைக்கு வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

155/52 காலிபர் கொண்ட இந்த பிரங்கிகளின் ஒப்பந்த மதிப்பு சுமார் 3,364.78 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன இழுவை ஆர்டில்லரி அமைப்பு எனப்படும் இந்த ஆர்டில்லரி அமைப்பை நமது டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ளது.சுமார் 40கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது ஆகும்.

high explosive–base bleed (HE–BB) ammnition வைத்து சுட்ட போது இந்த ஆர்டில்லரி 48கிமீ வரை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.