கல்யானி நிறுவனத் தயாரிப்பு நான்கு ஆர்டில்லரிகளை சோதனை செய்யும் இராணுவம்

  • Tamil Defense
  • August 28, 2020
  • Comments Off on கல்யானி நிறுவனத் தயாரிப்பு நான்கு ஆர்டில்லரிகளை சோதனை செய்யும் இராணுவம்

கல்யானி க்ரூப் தயாரிப்பு ஆர்டில்லரிகள் இந்திய இராணுவத்தில் இணைவதற்கான ஓட்டத்தில் உள்ளன.நான்கு ஆர்டில்லரி அமைப்புகள் தற்போது கல்யானி க்ருப் மேம்படுத்தியுள்ளது.தற்போது இவை உள்ளக சோதனைகள் முடிவு செய்து உபயோகிப்பாளர்கள் சோதனையில் (இந்திய இராணுவம்) உள்ளது.இவை விரைவில் இந்திய இராணுவத்தில் இணைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருடா 105 ,பாரத்-52, 155mm/39cal மிக இலகுரக ஹௌவிட்சர் மற்றும் ட்ரக்கில் பொருத்தப்பட்டுள்ள 155mm/39cal இலகுரக ஹொவிட்சர் ஆகியவை ஆகியவை தற்போது சோதனையில் உள்ளன.இதற்காக சோதனைகள் முடிவுறும் போது சுமார் 400 அமைப்புகள் வரை வாங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எல்பிட் சிஸ்டம்ஸ் தயாரித்த ஏதோஸ் 2052 towed gun முதலில் வாங்கப்படலாம் எனக்கூறப்பட்ட நிலையில் தற்போது பாரத்-52 வாங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருடா-105 ஹொவிட்சர் இலகுரகமானது.இது ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

பாரத் 52 (155mm/52cal) நெடுந்தூரம் தாக்கும் ஆர்டில்லரி ஆகும்.41கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க வல்லது ஆகும்.

MArG – ஸ்டீல், மற்றும் டைட்டானியம் (155mm/39cal) ஒரு மிக இலகு ரக ஹொவிட்சர் ஆகும்.இது அமெரிக்காவின் எம்777 போன்றது ஆகும்.30கிமீ வரை சுடக்கூடியது.

Truck Mounted MArG ஸ்டீல் ஒரு 7.8டன்கள் எடையுடைய 155 mm, 39-calibre இலகுரக ஹொவிட்சர் ஆகும்.இது ஒரு 4X4 மீடியம் டியூடி ட்ரக் மீது பொருத்தப்பட்டிருக்கும்.