எல்லை மோதல் எதிரொலி; அதிநவீன ஆயுதங்கள் குறித்து ஆராயும் இந்திய இராணுவம்
1 min read

எல்லை மோதல் எதிரொலி; அதிநவீன ஆயுதங்கள் குறித்து ஆராயும் இந்திய இராணுவம்

சீனாவுடனான எல்லை மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இந்திய இராணுவம் அதிநவீன ஆயுதங்கள் குறித்து ஆராய தொடங்கியுள்ளது.

இந்த ஆய்வில் குழுவாக இயங்கும் ட்ரோன்கள், லேசர், மிதவை குண்டுகள், சுய சிந்திப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆராய உள்ளனர்.

சீனா இத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான ஆய்வை தொடங்கி உள்ள சூழலில் இத்தகைய ஆய்வு பணிகளை இந்தியா மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய ராணுவம் ஒர் புதிய நில போர்முறை திட்ட வரைவினை வெளியிட்டது. இதில் நமது மொத்த போர் கட்டமைப்பு திறனையும் மாற்றி அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி ஒருங்கிணைந்த சண்டை குழுக்கள், மைக்ரோ செயற்கைகோள்கள், லேசர் ஆயுதங்கள், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவை அத்தியாவசியம் என கூறப்பட்டது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் அப்போதைய தரைப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்திய முப்படைகளிலும் புகுத்தப்பட வேண்டும் என்றார்.