ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பஞ்சாப் ரெஜிமென்ட்டை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சிப்பாய் ரோஷன் குமார் வீர மரணம் அடைந்தார்.
இந்திய ராணுவம் தற்போது கடுமையான பதிலடி கொடுத்து வருவதாகவும், பாகிஸ்தான் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.