1 min read
உள்நாட்டு தயாரிப்பு ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்
இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ஆறு வெப்பன் லோகேட்டிங் ரேடார்களை இந்திய இராணுவம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்வாதி Weapon Locating Radars (WLRS) அமைப்புகளை சுமார் 400 கோடிகள் செலவில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.எதிரி எங்கிருந்து ஆர்டில்லரி கொண்டு தாக்குகிறான் என்பதை மிகத்துல்லியமாக இந்த ரேடாரால் கண்காணிக்க முடியும்.
மத்திய இராணுவ கொள்முதல் கூட்டம் ஒப்புதல் அளித்த பிறகு இந்த ரேடார்கள் வாங்கப்படும்.இந்த ரேடார்கள் தவிர இஸ்ரேலிடம் இருந்து ஆளில்லா விமானங்களும் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.