தெற்கு பங்கோங் அருகே உள்ள உயர்பகுதிகளை கைப்பற்றிய இராணுவம்

  • Tamil Defense
  • August 31, 2020
  • Comments Off on தெற்கு பங்கோங் அருகே உள்ள உயர்பகுதிகளை கைப்பற்றிய இராணுவம்

தெற்கு பங்கோங் ஏரிக்கு அருகே உள்ள குறைந்தது நான்கு முதல் ஐந்து உயர் மலைப் பகுதிகளை இந்திய இராணுவம் கைப்பற்றி அங்கே ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பங்கோங் ஏரிக்கு அருகே உள்ள தாகுங் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இதில் இராணுவத்தின் சிறப்பு படைகளும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் வியூக ரீதியாக தெற்கு பங்கோங் பகுதியில் இந்திய இராணுவம் ஆதிக்கம் செலுத்த முடியும்.

சில நாட்களுக்கு முன் தான் சிறப்பு படைகள் இந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.ஆக 29/30 ல் இந்த படைகள் நகர்ந்து முக்கிய உயர பகுதிகளை கைப்பற்றியுள்ளன.இந்த இடத்தில் இருந்து சீனப்படைகள் சில நூறு மீட்டரில் தான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தம் எனினும் சீனா இது தனது பகுதிகளாக கருதுகிறது.இதற்காக ஏற்கனவே இரு கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று விட்டன.