
காஷ்மீரின் எல்லைக்கோடு பகுதியின் அருகே மச்சில் செக்டார் பகுதியியில் பயங்கரவாத ஊடுருவலை இராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்திய எல்லைக்குள் 600மீ தொலைவில் சந்தேகத்திற்கு உரிய நடமாட்டம் இருப்பதை இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
பயங்கரவாதிகளை வீரர்கள் வழிமறித்த பின்பு சண்டை தொடங்கியுள்ளது.அதிகாலை மூன்று மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது.சண்டையை தொடர்ந்து விடிந்ததும் வீரர்கள் அந்த பகுதியில் பயங்கரவாதிகளை தேடியுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் இரத்தத்துடன் மூன்று ஏகே துப்பாக்கிகள் கிடந்துள்ளது.இத்துடன் ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வீரர்கள் கைப்பற்றினர்.
தப்பிய பயங்கரவாதிகள் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.