லடாக் மீதிருந்து பார்வையை விலக்காத இராணுவம்; பனிசார் ஆயுதங்களை வாங்க உள்ளதாக தகவல்

  • Tamil Defense
  • August 1, 2020
  • Comments Off on லடாக் மீதிருந்து பார்வையை விலக்காத இராணுவம்; பனிசார் ஆயுதங்களை வாங்க உள்ளதாக தகவல்

இந்திய-சீன எல்லையின் 1597கிமீ தொலைவிலான எல்லையின் அமைப்பை சீனா மாற்ற முயற்சித்து வரும் வேளையில் இந்தியா வர உள்ள பனிக்காலத்திற்கு தயாராகி வருகிறது.ஏப்ரல் 2020 போல அடுத்த வருடமும் ஆகிவிடாமல் இருக்க இந்திய இராணுவம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் அவசர கதியில் வீரர்களுக்கான பனி உடைகள் மற்றும் பனிக்கூடாரங்கள் வாங்க இந்திய இராணுவம் முடிவெடுத்துள்ளது.

1984 ஆபரேசன் மேகதூத்திற்கு பிறகு இந்திய இராணுவம் இதற்கான தேவைகள் உணர்ந்து அனைத்துவிதமான பனி ஆயுதங்களை பெற்றது.பனி கண்ணாடி,கை உறை ஆகியவையும் அடங்கும்.

லடாக் செக்டாரில் சீனாவின் படையை போலவே இந்தியாவும் படையை குவித்துள்ளது.அடுத்த வருடமும் சீனா மீண்டும் ஊடுருவ வாய்ப்புள்ளதால் இராணுவம் அதற்கான வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து முழுஅளவில் தயாராக உள்ளது.நாங்கள் சீனர்களை நம்பவில்லை.அடுத்த வருடம் கோடை தொடக்கத்தில் அவர்கள் மீண்டும் ஊடுருவக்கூடும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.