காஷ்மீரில் குண்டுவெடிப்பு நிகழ்வதை தடுத்த ராணுவம் !!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on காஷ்மீரில் குண்டுவெடிப்பு நிகழ்வதை தடுத்த ராணுவம் !!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இதற்கு பயங்கரவாத இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவி வந்தது.

இந்த நிலையில் ஶ்ரீநகர் பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் 29ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணி ரோந்து சென்ற போது கண்ணிவெடி ஒன்றை கண்டுபிடித்தனர்.

பின்னர் ராணுவ பொறியியல் படையணிகளை சேர்ந்த குண்டுகள் செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்படனர்.

இவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து குண்டை செயலிழக்க வைத்து நடக்கவிருந்த துர்ச்சம்பவத்தை தடுத்துள்ளனர்.

ஜெய்ஹிந்த் !!