எல்லைப்பிரச்சனை எதிரொலி: இந்தியா நேபாளம் பேச்சுவார்த்தை

  • Tamil Defense
  • August 12, 2020
  • Comments Off on எல்லைப்பிரச்சனை எதிரொலி: இந்தியா நேபாளம் பேச்சுவார்த்தை

இந்தியா நேபாளம் இடையே தற்போது நடந்து வரும் எல்லைப்பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் வரும் ஆகஸ்டு 17 அன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேபாளின் வெளியுறவு செயலர் சங்கர் தாஸ் மற்றும் இந்திய தூதர் வினய் க்வத்ரா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

டெவலப்மெண்ட் குறித்த பேச்சுவார்த்தைகள் தான் பிரதானமாக இருக்கும் என கூறப்பட்டாலும் எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் இந்திய பகுதிகளான லிபுலேக்,லிம்பியதுரா போன்ற பகுதிகளை நேபாளம் இணைத்து புதிய மேப்பை வெளியிட்டது.இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுரக் அவர்கள் கூறியிருந்தார்.