பாகிஸ்தானுடனான இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் பணி ஆகும்,
இந்திய விமானப்படை கட்டளையகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய கட்டளையகங்களில் இது ஒன்றாகும்.
இன்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் பதவ்ரியா இந்த கட்டளையகத்தின் முக்கிய தளம் ஒன்றிற்கு தீடிர் விசிட் அடித்தார்,
அப்போது தயார்நிலை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மிக்21 போர் விமானத்திலும் சிறிது நேரம் பறந்துவிட்டு வீரர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து அறிவுரைகளையும் வழங்கினார்.