பாக் மற்றும் சீனாவுடன் இணைந்து பயிற்சி இல்லை-வெளியேறியது இந்தியா

  • Tamil Defense
  • August 29, 2020
  • Comments Off on பாக் மற்றும் சீனாவுடன் இணைந்து பயிற்சி இல்லை-வெளியேறியது இந்தியா

இரஷ்யா நடத்தும் பலநாடுகள் கலந்து கொள்ளும் போர்பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவித்துள்ளது.இந்த போர்பயிற்சியில் பாக் மற்றும் சீனா கலந்து கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவு படுமோசமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரஷ்யா இந்த போர்பயிற்சியில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஒருங்கிணைந்த தளபதி ராவத்
அவர்கள் தற்போது நடத்திய கூட்டத்தில் இந்தியா இரஷ்ய அழைப்பை நிராகரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த சந்திப்பிற்கு முன்பு இந்த பயிற்சியில் கலந்து கொள்ள இந்தியா தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவும் பாகிஸ்தானும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.