லெபனானிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பும் இந்தியா

  • Tamil Defense
  • August 11, 2020
  • Comments Off on லெபனானிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பும் இந்தியா

பெய்ரூட் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் நாட்டிற்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளது.இந்த சப்ளைகள் விரைவில் லெபனான் அனுப்பப்படும்.இந்த குண்டு வெடிப்பில் 200பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

லெபனானுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறுகையில் இந்தியா சில நாட்களுக்கு முன்பு தான் கோவிட்-19 சப்ளைகளை லெபனானுக்கு அனுப்பியதாக கூறினார்.

தற்போது உணவு,மருந்துபொருள்கள் மற்றும் மற்ற முக்கிய பொருள்களை இந்தியா லெபனானுக்கு அனுப்ப உள்ளது.